நிறுத்த முறையானே உயர்திணைக்கண் ரகரவீற்றுப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். ஆர், அர் என்னும் ஈற்றுப் பெயர்கள் ஈர் என்பதனோடு சிவணும், எ - று.
எ - டு. பார்ப்பார், கூத்தர், உடையர் என்பன பார்ப்பீர் கூத்தீர், உடையீர் என வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பெண்டிர், பெண்டீர் எனவும் வரும்.
(20)