ரகர ஈற்றுள் விளி ஏலாதன

138.

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.

ரகார ஈற்றுள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்.சுட்டு முதலாகிய ரகரவீற்றுப் பெயர்1 மேற் சொல்லப்பட்ட சுட்டு முதற் பெயர் போல விளி ஏலா, எ - று.

எ - டு. அவர், இவர், உவர், அத்தன்மையர், அத்தன்மையார் என்பன விளி ஏலா. 

(24)


1. 133 ஆம் நூற்பா.