செப்பின்கட் கிடந்ததோர் வழுவமைத்தலை நுதலிற்று.
இ - ள். வினாவும் செப்பாம் நிலையைப் பெறும், வினாவப் பட்ட சொற்றன்னானே யெதிர்த்து வருமாயின், எ - று.
எ - டு. சாத்தா உண்ணாயோ என வினாயவழி, உண்ணேனோ என்பது உண்ணேன், உண்பல் எனச் செப்பாது உண்பன் என்னும் பொருள்படச் செப்பினமையான் வழுவமைதி யாயிற்று.
(14)