லகர, ளகர ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு
எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.
லகார ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நீட்டம் கொடுத்தல் வேண்டும், எ - று.
எ - டு. குருசில், தோன்றல், மக்கள் என்பன, குருசீல், தோன்றால், மக்காள் எனவரும்.
(26)