ளகார ஈற்றுத் தொழிற் பெயரும் பண்பு கொள் பெயரும்
‘ஆய்’ ஆதல்

142.

வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆளென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.

ளகார ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். தொழிற்பெயர்க்கண்ணும் பண்புப் பெயர்க் கண்ணும் வரும் ஆள் என் இறுதி ஆய் ஆகும் விளித்தற்கண், எ - று.

பெயரென்பது அதிகாரத்தான் வந்தது. ஈண்டு விளி வயினான் என்பதற்கு மேல் உரைத்தவாறே உரைக்க.

எ - டு. உண்டாள், கரியாள் என்பன உண்டாய், கரியாய் எனவரும்.

(28)