ளகார ஈற்று முறைப் பெயர் விளி ஏற்குமாறு

143.

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல.

ளகார வீற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ளகார ஈற்று முறைப் பெயர்ச்சொல்1 னகார ஈற்று முறைப் பெயர் போல விளி ஏற்கும், எ - று.

எ - டு. மகள், மகளே எனவரும். ஒப்பின் முடித்தல் என்பதனால் முறைமை சுட்டாத மகள் என்பதும் ஏகாரம் பெற்று விளிஏற்கும். 2அகவன் மகளே அகவன் மகளே என வரும். 

(29)


1. 132. ஆம் நூற்பா.

2. குறு. 23.