ளகார ஈற்றுள் விளி ஏலாதன

144.சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.

ளகர வீற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். சுட்டெழுத்தை முதலாக உடைய பெயரும், வினாவானாகிய பெயரும்1 மேற்சொல்லியவாறு போல் விளி ஏலா, எ - று.

எ - டு. அவள், இவள் உவள், அத்தன்மையள், அத்தன்மையாள்; யாவள் என்பன விளி ஏலா என்றவாறு. 

(30)