லகார, ளகார ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு
அளபெடைப் பெயரே அளபெடை யியல.
லகார ளகார ஈறுகள் அளபெடைக்கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். லகார, ளகார ஈற்று அளபெடைப்பெயர் 2மேற் சொல்லப்பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகும். எ - று.
எ - டு. வலம்புரித் தடக்கை மாஅல்: மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள் என வரும்.
(31)