அம்ம என்னும் சொல் விளிப் பொருண்மையில் வரும் எனல்

149.

அம்ம வென்னும் அசைச்சொன் னீட்டம்
அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.

இடைச் சொற்கண் விளிப் பொருண்மை உணர வருவன
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அம்ம என்னும் அசைச்சொல் நீட்டமாகிய அம்மா என்னும் சொல் அம்முறைப் பெயரோடும் பொருந்தா தாயினும், அதனை விளிப்பொருண்மை உணர்த்துஞ் சொல்லோடு கூட்டிக் கொள்ப அறிவோர், எ - று.

எ - டு. அம்மா கொற்றா எனவரும். ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ என்பதனால், ஏட, ஏடா; ஏடி, ஏடீ என வருவனவுங் கொள்க. 

(35)