இதுவும் அது
இ - ள். செப்பு வழீஇயினும் நீக்கப்படாது, அச் செப்புதற்குப் பொருண்மையைப் பொருந்திய சொல்லின்கண், எ-று.
ஏகாரம் சிறப்புப்பற்றி வந்தது. அதிகாரப் புறநடையாற் கொள்ளப்படும்.
எ - டு. உண்ணாயோ சாத்தா என்றவழி, நீயுண் எனவும், வயிறுகுத்திற்று எனவும், வயிறு குத்தும் எனவும் இவ்வாறு வருவன. இவையும் உண்ணேன், உண்பல் என வாராமல் உண்ணென்னும் பொருள்பட வருதலின் வழுவமைதியாயின.
(15)