எஞ்சிய உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். த, ந, நு, எ-என்பன முதலாகிப் பொருண்மை குறித்த, ன, ர, ள என்னும் ஈற்றினையுடைய சொற்களும், அத்தன்மைய பிறவும் வினைக் குறிப்பு நீர்மை யன்றிப் பெயராகி வரின் விளியேற்றலின்மை வேண்டும் ஆசிரியர், எ - று.
அவையாவன:--தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர். அன்ன பிறவும் என்றதனால் பிறன், பிறள், பிறர் எனவரும். இவை விளி ஏலா.
| 2விளங்கு மணிக்கொடும் பூணாஅய் நின்னாட் டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ. |
என்புழி, யகர வீறு விளி யேற்றதாலெனின், அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சி யின்மையின், எடுத்தோதிற்றிலர், ஆயினும் செய்யுண் மருங்கின் என்னும் அதிகாரப் புறநடையால், இந்நிகரன வெல்லாம் அமைத்துக் கொள்க.
இவ்விளி வேற்றுமையை முடிக்குஞ் சொல் யாதோ எனின், இஃது எழுவாய் வேற்றுமையது திரிபாகலான், அதற்குப் பயனிலையாகி வருவனவற்றுள் இதற்கு ஏற்புடையன முடிக்குஞ் சொல்லாம் எனக் கொள்க. இவ்வாறு ஒற்றுமை யுடைத்தாகலானே ஒருசார் ஆசிரியர் வேற்றுமையேழெனக் கொண்டதென உணர்க.
(36)
விளி மரபு முடிந்தது
1. விளியொடு கொளலே--ஏனை யுரைப் பாடங்கள்.
2. புறநா. 130.