நிறுத்த முறையானே பெயர்ச்சொற் பாகுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் பெயர் என்று சொல்லப் படுபவை ஆராயுங் காலத்து உயர்திணைப் பொருட்கே உரிமையவாகியும், அஃறிணைப் பொருட்கே உரிமையவாகியும், அவ் விரு திணைக்கும் ஒத்த உரிமைய வாகியும் அம்மூன்று வடிவினையுடைய தோன்றுதற்கண், எ - று.
எனவே பெயர்ச் சொல் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என மூவகைப்படும் என்பதூஉம், அது அவ்விருதிணைப் பொருள்களையும் உணர்த்தும் என்பதூஉம் பெறுதும், உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும்.
(6)
1. ‘அம்மூவுருவின’ என்பது நச்சினார்க்கினியர் பாடம்.