நிறுத்த முறையானே உயர்திணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட பெயரிடத்து அவன் முதலாகிய சுட்டுப்பெயர் ஒன்பதும், யான் முதலாகிய தன்மைப் பெயர் மூன்றும், யாவன் முதலாகிய வினாவின் பெயர் மூன்றும், ஆய அப் பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ - று. யான் என்பது ஒருமை உணர நின்றது. (8)
|