இதுவும் அது

160.எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை யடுத்த மகனென் கிளவியும்
அன்ன வியல என்மனார் புலவர்.

இதுவும் அது.

இ - ள். எல்லாரும் என்னும் பெயரும், எல்லீரும் என்னும் பெயரும், பெண்மகன் என்னும் பெயரும் பால் விளங்கவந்த உயர்திணைப் பெயராம், எ - று.

விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு.

(10)