விரவுப் பெயரின் பாகுபாடு

171.அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்.

நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின.

மேற் சொல்லப்பட்ட பெயர் விரிவகையான் உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் இயற் பெயர் நான்கு வகைப்படும், சினைப் பெயர் நான்கு வகைப்படும், சினை முதற் பெயர் நான்கு வகைப்படும், முறைப் பெயர் இரண்டு வகைப்படும், ஏனைப் பெயர் ஓதிய வாய்பாட்டன, எ - று.

(21)