சினைப் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட சினைப் பெயரது நிலைமையாவது பெண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர்,ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், பன்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், ஒருமைப்மல் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் என அந்நான்கும், எ - று. எ - டு. முலை என்பது பெண்மை குறித்து நின்றது. மோவாய் என்பது ஆண்மை குறித்து நின்றது. கை என்பது ஒருமை குறித்து நின்றது. தலை என்பது பன்மை குறித்து நின்றது. (23)
|