சினைமுதற் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். பெண்மை சுட்டிய சினை முதற் பெயர் முதலாகிய நான்கும் சினை முதற் பெயராவன, எ - று.
ஈண்டுச் சினை முதற் பெயர் என்றமையான் முதலைக் குறித்த பெயரும் சினையைக்
குறித்த பெயரும் அன்றி, முதலையும் சினையையும் குறித்த பெயர் என்று கொள்ளப்படும்.
எ - டு . முடத்தி என்பது பெண்மையைக் குறித்தது. முடவன் என்பது ஆண்மையைக் குறித்தது. செவியிலி என்பது ஒருமையைக் குறித்தது. தூங்கல் என்பது பன்மை குறித்தது.
(24)