முறைப் பெயர் இரண்டு

175.பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்
றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.

முறைப் பெயர் இரண்டும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும், ஆண்மைப்
பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் என முறைப் பெயர் இரண்டாவன, எ - று.

எ - டு. தாய் என்பது பெண்மை குறித்தது. தந்தை என்பது ஆண்மை குறித்தது. பிறவுமன்ன.

(25)