பன்மை குறித்த பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பன்மை குறித்த பெயர் எல்லாம் அஃறிணை ஒருமை, பன்மைக்கும், உயர்திணை ஆண்பால் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ - று. எ - டு. யானை வந்தது, தலை முடித்தது, தூங்கல் வந்தது என அஃறிணை ஒருமை ஆயின. யானை வந்தன, தலை முடித்தன, தூங்கல் வந்தன; இவை அஃறிணைப் பன்மை உணர்த்தின. யானை வந்தான், தலை முடித்தான், தூங்கல் வந்தான் என உயர்திணை ஆண்பாலாயின. யானை வந்தாள். தலை முடித்தாள், தூங்கல் வந்தாள் என உயர்திணைப் பெண்பால் ஆயின. (28)
|