தான் என்னும் விரவுப் பெயர்

181.தான்என் கிளவி ஒருமைக் குரித்தே.

தான் என்னுஞ் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். தான் என்னும் சொல் இருதிணைக்கண்ணும் ஒருமைக்கு உரித்து, எ - று.

எ - டு. தான் வந்தான், தான் வந்தாள் என உயர்திணை ஒருமை உணர்த்திற்று. தான் வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்திற்று.

(31)