நீயிர் நீ என்னும் விரவுப் பெயர்
நீயிர் நீயென வரூஉங் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள.
நீயிர், நீ என்னும் பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். நீயிர், நீ என்னும் பெயர் திணையும் பாலும் விளங்க நில்லா; இருதிணையையும் உடன் உணர்த்தும் பொருண்மையுடைய, எ - று.
திணை உணர்த்துவதோர் சொல்லின்மையிற் பால் எனவே திணையும் அடங்கும்.