இதுவும் அது

184.

1அவற்றுள்
நீ என் கிளவி ஒருமைக் குரித்தே
ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.

மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நீ என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமை விளக்குதற்கு உரித்து. நீயிர் என்னும் பெயர் பன்மை விளக்குதற்கு உரித்து, எ - று.

எ - டு. நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்றவழிப், பால் விளங்காது ஒருமை பன்மை விளங்கியவாறு கண்டுகொள்க. அன்ன பிறவாற் கொள்ளப்படுவன: முதியான் என்பது பிராயம் பற்றி வரும். அது முதியான் வந்தது, முதியான் வந்தான் என வரும். சுமையான் என்பது தொழில்பற்றி வந்தது. சுமையான் வந்தது சுமையான் வந்தான் என வரும். பிறவுமன்ன.

(34)


1. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை உரை யாசிரியர்கள்.