ஒருவர் என்பது உயர் இருபாற்கும் பொது

185.

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கு முரித்தே தெரியுங் காலை

உயர்திணைப் பொருட்கண் விரவுப் பெயரிலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒருவர் என்று சொல்லப்படுகின்ற பெயர்ச்சொல் உயர்திணைக்கண் ஆண்பாற்கும், பெண்பாற்கும் உரித்து ஆராயுங் காலத்து, எ - று.

(35)