பெண்மகன் என்னும் பெயரது இயல்பு
மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி மகடூஉ இயற்கைத் தொழில்வயி னான.
உயர்திணைப் பெண்பாற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மகடூஉ மருங்கில் பால்திரிந்த பெண்மகன் என்னும் சொல் தொழிற் படுங்கால் மகடூஉ இயற்கையாம், எ - று.
எ - டு. பெண்மகன் வந்தாள் எனவரும்.
(38)