பெயர்களுள் சில ஆகாரஈறு ஓகாரமாதல்

189.

1ஆவோ வாகும் பெயருமா ருளவே
ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே.

இஃது ஒருசார் பெயர்க்கு உரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆகாரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள: அவ்வாறு வரும் இடம் செய்யுளகத்து அறிந்து கொள்க, எ - று.

எ - டு.

2‘வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே
நல்லோர் யார்கொல் அளியர் தாமே’

என்ற வழி, வில்லான், தொடியாள், நல்லார் என்பன ஓகாரம் பெற்று வந்தன.

உம்மை எச்ச உம்மை யாகலான் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள என்றவாறு, கிழவன் கிழவள் என்பன 3நாடு கிழவோன், கிழவோடேத்து எனவும் வரும். அஃறிணைப் பொருட்கண்ணும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க.

(39)


1. ‘ஆயிடனாதல்’ எனவும் பாடம்.

2. குறு-7.

3. பொருந-248.