உலகத்துப் பொருளெல்லாம் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என அடங்குதலின், அவற்றுள்
இயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். இயற்கைப் பொருளென்பது காரணப் பொருள், அதனை இத்தன்மைத்து எனச் சொல்லுக, எ - று.
அவை நிலம் நீர் தீ வளி ஆகாயம் உயிர் என்பன. அவற்றை நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளியுளரும், ஆகாயம் நிற்கும், உயிர் உணரும் எனக் கூறுக.
நிலம் வலிதாயிற்று எனக் கூறலாகாது. என்னை? ஆக்கங் கொடுப்பின் அதற்கு இயல்பு பிறிதாவான் செல்லு மாகலின் வழுவாம்.
(19)