செயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறுணர்த்துதல்
நுதலிற்று
இ - ள். செயற்கைப் பொருளாவது காரியப் பொருள்; அதனை ஆக்கச் சொல்லொடு படுத்துக் கூறுக, எ - று.
செயற்கையாய்த் தன்னியல்பின் வேறுபடுவன வெல்லாம் செயற்கைப் பொருளென்று கொள்க.
எ - டு. மண் குடமாயிற்று, நூல் ஆடையாயிற்று, மரங் கதவாயிற்று எனவும்; பைங்கூழ் நல்லவாயின. மயிர் நல்லவாயின எனவும் வரும்.
அஃதேல், பைங்கூழ் நல்ல, மயிர் நல்ல என ஆக்கமின்றியும் வருமால் எனின், அவை யக்காலத்தியற்கைபற்றிக் கூறப்பட்டன; முன்பு நின்ற நிலைகண்டு கூறப்பட்டன அல்லவென்க. அதனானேயன்றே வருகின்ற சூத்திரங் கூறவேண்டியது.
(20)