உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று

200.அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். அர், ஆர், ப என வரும் மூன்று சொல்லும் உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை உணர வரும் சொல்லாம், எ - று.

1அரு என்புழி வந்த உகரம் செய்யுள் விகாரம் என்பதும் ஒன்று. ஒற்றீறாகி வரும் சொற்கள் உகரம் பெற்று வழங்கப் பெறும் என்பது அறிவித்தற்கு, உடம்பொடு புணர்த்துக் கூறினார் என்பதும் ஒன்று.

எ - டு. உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர்; உண்டார், உண்ணாநின்றார், உண்பார்; உண்ணார்; உண்ப என வரும்.

(9)


1. அரு என்பதும் பாடம்.