இதுவும் அது

201.மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.

மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மார் ஈற்று வினைச்சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது பெயரோடு முடிதலேயன்றி, வினையோடும் முடியும் என்று சொல்லுவார், எ - று.

எ - டு. ஆ கொண்மார் வந்தார். இது வினையோடு முடிந்தது. 1பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே-இது பெயரோடு முடிந்தது.

இதனையும், செய்கு என்பதனையும் வினையெச்சம் என்றதனாற் குற்றம் என்னை எனின். வினை எச்சம் பால் தோன்றாது: இவை பால் தோன்றலின், முற்று எனல் வேண்டும்.

(10)


1. புறம்-375.