இது ரகரவீற்றுக்கண் வழுவமைத்தலை உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். யார் என்னும் வினாப் பொருண்மை உணர்த்துஞ் சொல் அவ் வுயர் திணைக்கண் முப்பாற்கும் உரித்து, எ - று.
யார் என்பது காலங் காட்டாமையின், வினைச் சொல் ஆகாது எனின், வேற்றுமை ஏலாமையான் வினை எனப்படும். அதனானேயன்றே, வினை எனப்படுவது காலமொடு தோன்றும் என்னாது, வேற்றுமை கொள்ளாது எனவும் ஓதல் வேண்டிற்று என்க.
எ - டு. அவன் யார், அவள் யார், அவர் யார் எனவரும்.
(13)