இது படர்க்கை வினைக்கண் வரும் திரிபு உணர்த்துதல் நுதலிற்று,
இ - ள். பால் விளங்குதலை மரபாக உடைய னகாரம், ளகாரம், ரகாரம் ஆகிய மூவீற்றும் ஆகாரம் ஓகாரமாகித் திரியும் செய்யுளகத்து, எ - று.
எ - டு. 1வினவி நிற்றந் தோனே. 2நல்லை மன்னென நகூஉப் பெயர்ந் தோளே. 3சான்றோ ரல்லர் தோழி எனவரும். செய்யுள் ஆகாரமாகி வரப் பெறாதோ எனின், வழக்கிற்கு உரியன செய்யுட்காம் என்பது சொல்லாமற் பெறுதும் என்று கொள்க.
(14)
1. அகம்--48.
2. அகம்--248.
3. (பாடம்) சென்றோரன்பிலர் தோழி.