இது முன்னிலை வினைச்சொற்கு உரியதோர் திரிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆய் என்னும் முன்னிலை வினைச்சொல்லும் ஓகாரமாகத் திரியும், எ - று. முன்னிலை வினை ஈண்டுக் கூறிற்றிலராயினும், திரிபு ஒப்புமை நோக்கிப், பருந்துவிழுக்காடு என்னும் சூத்திரக் கிடக்கையான், ஈண்டு ஓதப்பட்டது. எ - டு 1வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப எனவரும். (15)
1. அகம். 80.
|