எவன் என்னும் வினைமுற்று

213.அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்என் வினாவே.

அஃறிணைக்கு உரியதோர் வினாச்சொல் பாலுணர்த்துமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அஃறிணை இடத்து இருபாற் கிளவிக்கும் எவன் என் வினா ஒக்கும் என்று சொல்லுவர், எ - று.

எ - டு. இப் பண்டியுள்ளது எவன், இப் பண்டியுள்ளன எவன் என வரும்.

(22)