நிறுத்த முறையானே இருதிணைக்கும் உரிய வினை
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட வற்றுள், முன்னிலை வினை முதலாக எடுத்து ஓதப்பட்ட எண்வகைச் சொல்லும், பிரிந்து பொருள் வேறுபடூஉம் செய்கையவாகிய இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையை உடைய என்றவாறு.
உதாரணம் முன்னர்க் காட்டுதும்.
(25)
1. பிரிவு வேறுபடூஉம் என்பது இளம்பூரணர் பாடம். திரிபு வேறுபடூஉம்’ என்பது சேனாவரையர் பாடம்.