இதுவுமது

22. 

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.

மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆக்கச் சொல் காரணமின்றியும் வரும் வழக்கினுள், எ-று.

எனவே, செய்யுளகத்து வரப்பெறா என்றவாறாம். போக்கின்றென்பது போகுதலின்று என்றவாறு. எனவே வரும் என்று பொருளாயிற்று. உம்மை இறந்தது தழீஇயிற்று.

ஆடை நன்றாயிருந்தது, மணி நன்றாயிருந்தது என நன்றாதற்குக் காரணங் குறியாது வந்தன. பைங்கூழ் நல்லவாயினவென இடமுங்காலமும் இனமுஞ் சுட்டாது கண்டகாலத் தியற்கைபற்றி வரும் வழக்குக் கொள்க.

(22)