இதுவும் வினையெச்ச வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். பின் முதலாக ஓதப்பட்டனவும், அத்தன்மையவாகிய மரபினாற் காலங் குறித்து வரும் எல்லாச் சொல்லும் வினையெச்ச இயல்பின, எ - று.
எனவே, மேற் சொல்லப்பட்டவற்றோடு ஒரு நீர்மைய அல்ல என்பது பெறப்பட்டது. அன்ன மரபினாற் கொள்ளப்படுவன உம், மற், மை, கிற், இன்றி, அன்று, இனிக்கொண்டான், நனிவந்தான் என வருவனவும், பிறவும். இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும்.
(32)