வினையெச்சங்கள் அடுக்கிய வழிப்படுவதோர் இலக்கணம்

227.

பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.

வினையெச்சம் அடுக்கி வருவழி வருவதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினை யெச்சச் சொற்றாம் சொற்கடோறும் முற்றுப் பெறாது பலவாற்றானும் அடுக்கிவரினும், இறுதி நின்றது முடிய ஏனையவும் பொருண்முடிவு பெற்றனவாம், எ - று.

எ - டு. உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான். உண்டு பருகிக் கூத்திற் புக்கு வந்தான் என வரும். பிறவுமன்ன.

(36)