செய்யும் என்னுஞ் சொல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கும், உம்மையாற் செய்யும் என்னும் முற்றுச் சொற்கும் ஈற்றுமிசை யுகரம் மெய்யோடுங் கெடும். அது கெடுமிடம் அறிந்து கொள்க, எ - று. வாம் புரவி வழுதி எனவரும். 2இது பெயரெச்சம். 3அம்பலூரு மவனொடு மொழிமே. இது முற்றுச்சொல். மெய்யொடுங் கெடும் என்ற உம்மையால் மெய்யொழியவுங் கெடும் என்று கொள்க. சாரனாட வென் றோழியுங் கலுழ்மே எனவரும். பிறவுமன்ன. (41)
1. அவ்விடன் அறிதல் என்பது பிறவுரையாசிரியர்கள் கொண்ட பாடம். 2. ஈங்குச் சில சொற்கள் பொருட்டொடர் பின்றிக் காணப்பட்டதாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பதிப்பிலுள்ளது. 3. குறுந்--51.
|