இதுவும் அது

234.

முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்.

இதுவும் அது

இ - ள். யாதானும் ஒருமுறைமையினையுடைய வினைச்சொல்லும் மூன்று காலமுந் தோன்றும் இயற்கைக்கண், நிகழுங் காலத்துப் பொதுநிலைப் பொதுச் சொல்லாற் கிளத்தல் வேண்டும், எ - று.

வினைச் சொல் எல்லாங் காலங் காட்டுதலின், காலங் காட்டாத பொதுப்பட்ட வினையை நிகழ்காலத்துக்கண் எல்லாப் பாற்கும் பொதுவாகி வரும் செய்யும் என்னும் சொல்லாற் சொல்லுக என்றவாறாயிற்று. ஒருவன் உண்பானாக அகம்புக்கான், அவனது வாயிற்கண் நின்றானை யாது செய்கிறான் என வினாயவழி, அவன் செய்கின்ற உண்டற் காலம் உணராமையின் உண்டான் எனவுமாகாது, உண்பான் எனவுமாகாது, ஆயிடை உண்ணும் என்க.

(43)