இதுவும் அது

235.வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு
1தோன்றல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.

இதுவும் அது

இ - ள். வருங் காலத்தும் நிகழ் காலத்தும் வரும் வினைச் சொல்லாகிய சொல், இறந்தகாலத்துக் குறிப்பொடு தோன்றல் விரைந்த பொருள் என்மனார் புலவர், எ - று.

ஒருவனை உண்டாயோ, போதாயோ என்றவழி, உண்ணாதவனும் உண்டேன், போந்தேன் என்னும்; உண்கின்றானும் அவ்வாறு சொல்லும். இவ்வாறு விரைவு குறித்து நின்றவாறு கண்டு கொள்க. ஓரும், ஆங்கும் அசைகள்.

(44)


1. கிளத்தல்--ஏனை உரைப்பாடம்.