இதுவும் அது இ - ள். வற்புறுத்தற் பொருண்மைக்கண் வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத்துப் பொருள் உணர்த்துதற்கு உரிமையாகலு முடைத்து, எ - று. எ - டு. யான் வைதேனா, யான் வைதேனோ என்பன வினாப் பொருண்மைப்படுதலன்றி வைதிலேன் என எதிர்மறைப் பொருளும் பட்டவாறு கண்டுகொள்க. (47)
|