முரித்து, அஃறிணை ஒருமையாற் கூறலுமுரித்து அப்பொருள், எ - று.
மேல் தானறி பொருள் என்றமையானும், ஈண்டு இருவீற்று மென்றமையானும் திணை ஐயம் என்பது பெற்றாம். ஐயம் என்பது அதிகாரத்தான் வந்தது. இருவீற்று முரித்து என்பதனை உரித்திரு வீற்றும் என்று மொழி மாற்றுக. அஃறிணைப் பிரிப்பென்றதனால் பொதுமையிற் பிரிவது ஒருமையாதலின் ஒருமைச் சொல்லாற் சொல்லினும் என்றாராகக் கொள்க.
குற்றியோ மகனோ என ஐயுற்றுழி, குற்றியோ மகனோ தோன்றுகின்ற உருபு, தோன்றுகின்ற அது என்க.
உருபு என்றதனான், அப்பொருள் பயக்கும் பிழம்பு, வடிவு, பிண்டம் என்பனவும் கொள்க.
(24)
1. ‘உருவென’ என்பது சேனாவரையர், கல்லாடனார் ஆகியோரது பாடம்.