செயப்படு பொருளைச் செய்ததுபோலக் கூறல்

240.செயப்படு பொருளைச் செய்தது போலத்
1தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே.

இது வினைச் சொற்கள் தம்முள் மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். செயப்படு பொருளைச் செய்யப்பட்டதெனக் கூறாது கருத்தாவைக் கூறுமாறு போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கியல் மரபு, எ - று. மரூஉ வழக்கு, எ - று.

எ - டு. சோறடப்பட்டது, திண்ணை மெழுகப்பட்டது எனற்பாலன சோறட்டது, திண்ணை மெழுகிற்று எனவரும். உம்மையாற் கருவியைக் கருத்தாவாகக் கூறலும் கொள்க. வாள் வெட்டிற்று, சுரிகை குத்திற்று எனவரும்.

(49)


1. தொழிற் படுத்தடக்கலும்--என்பதும் பாடம்.