இதுவும் இடைச் சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட இடைச்சொற்றாம் மொழியை முன்னும் பின்னும் அடுத்து வருதலும், தத்தம் ஈறுதிரிந்து வருதலும், பிறிதோர் இடைச்சொல் ஆண்டு அடுத்து வருதலும் ஆகிய அத்தன்மைய எல்லாம் உரிய, எ - று. எ - டு. அதுமன், கேண்மியா என்பன மொழி முன்2 வந்தன. கொன்னூர், ஒ ஓ கொடியை என்பன மொழிப் பின் வந்தன. மன்னைச் சொல் (சூ-4) என்றவழி ஈறுதிரிந்தது. வருகதில் லம்ம (அகம்-276) என்பது பிறிது அவண் நின்றது. பிறவுமன்ன. (3)
1. இங்குக் கூறும் முன், பின் என்பன இடம் பற்றியன.
|