இதுவும் அது. இ - ள். என்று என்னுமிடைச் சொல்லும் மேற் சொல்லப்பட்ட அறுவகைப் பொருண்மையுங் குறித்து நிற்கும், எ - று. எ - டு. கொள்ளென்று கொடுத்தான். துண்ணென்று துடித்தது. ஒல்லென்று ஒலித்தது. பச்சென்று கிடந்தது. நிலனென்று நீரென்று. 1சினத்தைப் பொருளென்று கொண்டவன் எனவரும். இது மாட்டேற்று வகையான் எச்ச வாய்பாட்டதென்று கொள்க. இச்சொற்களானும் செய்யும் என்பதன்கண் உம் இடைச் சொல்லாயினவாறு கண்டு கொள்க. (11)
1. குறள். 307.
|