தில் என்பதற்குப் புறனடை

257.விழைவின் தில்லை தன்னிடத் தியலும்.

இத்துணையும் பலபொருள் குறித்த இடைச்சொல் ஓதி, இனி ஒரு பொருள் குறித்த இடைச்சொல் ஓதுகின்றா ராகலின், மேற்சொல்லப்பட்டவற்றுள் ஒரு சொற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். விழைவுப் பொருட்கண் வரும் தில்லைச்சொல் சொல்லுவான்மாட்டே நிகழும், எ - று.

உதாரணம் மேற்காட்டப்பட்டது.

(12)