ஒரு பொருள் குறித்த இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மற்று என்னுமிடைச்சொல் ஒரு வினையை மாற்றுதற் பொருட்கண்ணும், அசைநிலையாகியும் வரும், எ - று. எ - டு. 1மற்றறிவா நல்வினை யாமிளையம் என்றவழி மற்று என்பது பின்பு அறிவாம் என அக்காலத்துச் செய்கின்ற வினையை மாற்றி நின்றது. 2மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ் என்றவழி அசைநிலை யாயிற்று. (14)
1. நாலடி. 19. 2. சீவக. 1873.
|