மன்ற என்னும் இடைச் சொல்லின் பொருள்

262.

மன்றவென் கிளவி தேற்றம் செய்யும்.

இதுவும் அது.

இ - ள். மன்ற என்னுஞ் சொல் தேற்றப் பொருண்மையை உணர்த்தும், எ - று.

எ - டு. 1கடவு ளாயினு மாக-மடவைமன்ற வாழிய முருகே என்ற வழிக், கடவுளாயினும் மடவை எனத் தேற்றப் பொருண்மை காட்டிற்று.

(17)


1. நற்றிணை. 34.