அந்தில் என்னும் இடைச்சொல்லின் பொருள்

264.

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்(று)
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப.

இதுவும் அது.

இ - ள். அந்தில் என்பது ஆங்கு என்னும் பொருண்மை பெற்றும், அசைநிலையாகியும் வரும், எ - று.

எ - டு. 1வருமே சேயிழை யந்திற்-கொழுநற் காணிய என்பது ஆங்கென்னும் பொருளுணர்த்திற்று.

அந்திற் கச்சினன் கழலினன் (அகம். 76) என்புழி, அசை நிலையாயிற்று.

(19)


1. குறுந். 293.