மா என்னும் இடைச் சொல்லின் பொருள்
அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மா என்னுஞ் சொல் வியங்கோட்கண் அசைநிலையாகி வரும், எ - று.
எ - டு. உப்பின்று - புற்கை யுண்கமா கொற்கை யோனே ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே. என வரும்.
(24)